tasmac shop at kumari

மதுரை அலங்காநல்லூரில் கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தகராறு ஏற்பட்டு மனைவி, மகள் தீ குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அதனால் மிக முக்கிய கடைகளான பால், மருந்து மளிகை, பழக்கடைகளே திறக்க அரசு அனுமதித்திருந்தது

இதனால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன இதன் காரணமாக பல குடும்ப பெண்கள் நிம்மதியுடன் இருந்தனர் வீட்டின் ஆண்கள் குடிக்காமல் வீட்டில் இருப்பதும் அவர்கள் உடல் நலன் குறித்தும் பெண்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்

fire bath 2

இந்நிலையில் திடீரென்று மே 7 தேதி முதல் டாஸ்மாக் கடைத் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. நீதிமன்றத்திலும் இதற்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கிற்கு எதிராக நீதிமன்றம் திறக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.

பல்வேறு கட்சி மற்றும் பலரும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்த நிலையிலும் இன்று டாஸ்மாக் திறந்து குடிமகன்கள் முகத்தில் மகிழ்ச்சியை நிரப்பியது அரசு.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவருக்கு ஒரு மகளும் மனைவியும் உள்ளனர்.இவர் இன்று டாஸ்மார்கில் சரக்கு வாங்கி குடித்து விட்டு வீடு வந்துள்ளார் இதனால் கணவன் மனைவிகிடையே சச்சரவு ஏற்பட்டது கணவர் சிவக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பரமேஸ்வரி(38), மகள் அர்ச்சனா(18) இருவரும் தீக்குளித்தனர்.

இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் அதிரிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending