
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் சென்று கொண்டிருந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷமிட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திங்கள்கிழமை நேற்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக அவருக்குச் சொந்தமான காரை எடுத்துக் கொண்டு கார் ஓட்டுநர் கோபி சரவணன் சென்றுள்ளார். அவர், திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் சென்றுகொண்டிருந்த போது 15 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தது. மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக முழக்கமிட்ட அக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து ஓட்டுநர் கோபி சரவணன் அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.



