வாஷிங்டன்:
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. டிரம்ப் தனது மனைவியுடன் மாளிகை வாசலுக்கு வந்தார். மோடியுடன் கைகுலுக்கி கட்டித் தழுவி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அவர் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணி) வெள்ளை மாளிகை சென்றடைந்த போது, அவருக்கு வெள்ளை மாளிகையில் சிகப்புக் கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப்பும், மெலனியாவும் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிபராக டிரம்ப்பை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு தொழில் வளர்ச்சி, சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப், மிகச் சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது நாட்டுக்கு பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக சிறப்பாக அவர் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்த வரவேற்பு எனக்கு அளித்த வரவேற்பு அல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அளிக்கப் பட்ட வரவேற்பு என்று கூறினார் மோடி.
தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து தனியாக சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் பின்னர் உரையாடிய போது, பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப், “மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். அவர் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ட்ரம்ப்பும், மெலனியாவும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த வரவேற்பானது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகப் பார்க்கிறேன். இந்த சந்திப்பில் நான் பேச நிறைய இருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னேற்றத்தின்மீது ஆர்வமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தக் கூட்டறிக்கையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் வளர்ச்சியின் உந்துசக்தியாக திகழ்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்திய பசிபிக் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதுதான் இருநாடுகளின் குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் அமைதி, வளர்ச்சியில் இருநாட்டின் பங்களிப்பு மேலும் வலுப்படும்.. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். பொருளாதார ரீதியாக மோடி சிறப்பாக செயல்படுகிறார்; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தந்ததில் பெருமிதம் கொள்வதாக டிரம்ப் கூறினார்.
இதன் பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று நெதர்லாந்த் செல்கிறார் மோடி.
During our talks, @POTUS and I discussed the menace of terrorism as well as the need to uproot all forms of terrorism. pic.twitter.com/9fxQRSKQAv
— Narendra Modi (@narendramodi) June 26, 2017
Areas where India-USA cooperation can scale up even further include maritime economy, technology, innovation & the knowledge economy. pic.twitter.com/1RHUJoDknG
— Narendra Modi (@narendramodi) June 26, 2017
I specially thank @POTUS for his kind words about India and his enthusiasm towards a vibrant India-USA partnership. pic.twitter.com/tmgzdXqN79
— Narendra Modi (@narendramodi) June 27, 2017
Sharing my remarks at the joint press meet with @POTUS at the @WhiteHouse. https://t.co/D4OYlPDfav pic.twitter.com/vMOnAXhgcs
— Narendra Modi (@narendramodi) June 27, 2017



