வா என்றழைத்தும் வர மறுத்த மனைவி! மனமுடைந்த கணவன் தற்கொலை!

Published:

dead bady 10

ஆவடி அடுத்த கரலப்பாக்கம், பெரிய தெருவை சேர்ந்தவர் அரசு (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ருக்கு (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தம்பதியினர் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதில், ருக்கு கணவர் அரசுவை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார். கடந்த 17ம் தேதி அரசு, மாமியார் வீட்டுக்கு சென்று ருக்குவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

ஆனால், அதற்கு ருக்கு சம்மதிக்கவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அரசு, வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து 18ம் தேதி வீடு திரும்பினார். பின்னர், அவர் மறு நாள் வீட்டில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அரசு பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் முத்தாப்புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img