கொரோனா: உயிரிழந்தவரை முட்புதரில் தூக்கி எறிந்த வீடியோ காட்சி! திருச்சியில் அவலம்!

Published:

srm

திருச்சி அருகே தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்றில் கொண்டு வரப்படும் சடலம் பொதுமக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் முட்புதரில் வீசிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி இருங்களூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்ஸ் கோட்டமேடு என்ற பகுதிக்கு செல்வது போல உள்ள அந்த காட்சியில், ஆம்புலன்ஸிருந்து மூவர் கீழே இறங்கி சடலத்தை தூக்கிச் சென்று முட்புதர் கீழே வீசுவதாக உள்ளது.

இதில், ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார். மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். எந்த பாதுகாப்பு உடைகளும் இல்லை. மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை காலை முதல் வைரலாக பரவி வருகிறது. இது, திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருச்சியில் சமயபுரத்தை அடுத்த தனியார் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அவரது உடலை மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான வேனில் ஏற்றிச் சென்று, அருகிலுள்ள கோட்டைமேடு என்ற பகுதியில், 3 ஊழியர்கள் சேர்ந்து தூக்கி வீசியுள்ளனர்.

இதுதொடர்பாக, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாகவும், விசாரணை முடிவிலேயே உரிய விவரங்கள் தெரிய வரும் என்றார்.

தற்போது, இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து, மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த நபர் கொரோனாவால் இறந்தது உண்மைதான், இந்த தகவலை அவரது உறவினர்களுக்கும் தெரிவித்துவிட்டோம்.

உறவினர்களிடையே சடலத்தை ஒப்படைக்கக்கூடாது என்பதற்காக நாங்களே வண்டியில் ஏற்றி அந்த பகுதியில் எரிக்க நடவடிக்கை எடுத்து வந்தோம்

சிலர் அதனை தவறாக சித்தரித்து, விடியோவை வெளியிட்டுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக விளக்கமளித்துள்ளர்.

மேலும், கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதாகவும், இதனால், உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் சமயபுரம் இருங்கலூர் கிராம மயானத்தில் உடல் புதைக்கப்பட்டதாகவும் சிவராசு தகவல் அளித்துள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி, அதில் ஈடுபட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் சிலர், பச்சமுத்து பேர் சொல்லி, இதையும் பகிர்ந்து வருகின்றனர்…

பாரிவேந்தர்_பச்சமுத்து. பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் உடனே மேடைக்கு வரவும்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்கலூர் பகுதியில் உள்ளது எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியும் உள்ளது இந்த மருத்துவமனையில் ஏராளமான புறநோயாளிகளும் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான வாகனத்தில் இறந்த ஒருவரது உடலை அருகே காட்டுப்பகுதியில் மூன்று பேர் சேர்ந்து தூக்கி வீசிவிட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வாக்காளனே பச்சை முத்து தமிழக எம்.பி! மோடியின் எதிர்ப்பாளர்… அதனால் இவர்மேல் கோபபட வேண்டாம்~

Related articles

Recent articles

spot_img