kalakadhal

மதுரை பாலமேடு பகுதியில், மனைவி கள்ளக்காதலை விட மறுத்ததால் கணவர் மகன்களுடன் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் மனைவி உஷா ராணி, மகன்கள் சித்தார்த் மற்றும் கோப்பெருஞ்சோழன் உடன் வசித்து வந்தார். பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக உள்ள உஷா ராணியும், அதே அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளரும் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த குமார், தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால், குமாருக்கும் உஷா ராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்த கணக்காளரை அரிவாளால் வெட்டினார். அதே நேரத்தில் தம்மை போலீஸார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், இரண்டு மகன்களுடன் விஷம் அருந்தியுள்ளார்.

இதில், குமாரின் இளைய மகன் சித்தார்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமாரும் அவரது மூத்த மகன் கோப்பெருஞ்சோழனும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில், கோப்பெருஞ்சோழன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலால் ஒரு குடும்பமே சின்னபின்னமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending