செல்லில் கேம் விளையாடிய சிறுவன்! தாய் கண்டித்ததால் தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை
deadbody

கோவை செல்வபுரம் பாரதிநகரைச் சேர்ந்த தம்பதியினர் செல்வகுமார் (37) லட்சுமி (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அதில் 12 வயதில் ராதாகிருஷ்ணன் என்ற மகனும், ஆறு வயதில் செல்வி என்ற மகளும் உள்ளனர்.

இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இராதாகிருஷ்ணன் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவன் செல்போன் வீடியோ கேம் விளையாடுவது பொழுதுபோக்காக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிறுவன் ராதாகிருஷ்ணன் செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடியதால், தாய் லட்சுமி கண்டித்ததாக தெரிகிறது.

செல்போனில் விளையாடுவதை கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளான்.

மேலும் நீண்ட நேரம் ரூமை விட்டு வெளியே வராததால் பெற்றோர் போய் பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

அதன்பின்னர் சிறுவனின் உடல் கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது. இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.