மனைவி 6 வது கர்ப்பம்.. 5 குழந்தைகளையையும் அடுக்கடுக்காய்.. தந்தை செய்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ்
5child - 2026

ஒரு அப்பாவுக்கு மொத்தம் 5 குழந்தைகள்.. இந்த 4 வருஷத்தில் 5 குழந்தைகளையுமே ஒவ்வொரு பாணியில் கொன்றுவிட்டார். இந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது!

தித்வாரா என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ஜுமாதின். 38 வயதாகிறது. இவர்தான் தன்னுடைய குழந்தைகளை கொன்றுவிட்டார்.. இதை பற்றி போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது:

ஜுமாதீன் மனைவி பெயர் ரீனா. இவர் சமீபத்தில் 6-வதாக கர்ப்பம் தரித்தார். ஆனால், கடந்த 15-ம் தேதியே அவரது 2 மகள்கள் காணாமல் போயுள்ளனர். ஒரு பெண்ணுக்கு 11 வயசு, இன்னொரு பெண்ணுக்கு 7 வயசு.

இதனால் 16-ம் தேதி போலீசில் ஜுமாதீன் புகார் தந்தார்.. ரீனாவுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 2 மகள்களையும் யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க என்று ஜுமாதீன் சொன்னார். ஆனால் போலீசாருக்கு ஜுமாதீன் மீதுதான் சந்தேகம் எழுந்தது. விசாரித்தபோது உளறி உளறி பதில் சொன்னார். இதனிடையே, 20-ம் தேதி அந்த 2 குழந்தைகளின் சடலங்களும் சாக்கடையில் மிதந்து கொண்டிருந்தன.

இதனால் ரீனாவின் சகோதரர் அசன், இந்த மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவரிடம் விவகாரத்தை கொண்டு சென்றிருக்கிறார். அப்போதுதான், அந்த பஞ்சாயத்து தலைவர்களிடம் ஜுமாதின் தன்னுடைய குழந்தைகளை கொன்றுவிட்டதாக சொல்லி இருக்கிறார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இதை வைத்து அவரிடம் விசாரணையை நாங்கள் ஆரம்பித்தோம்.. அப்போது அவர் சொன்னதை கேட்டு எங்களுக்கே அதிர்ச்சியாகி விட்டது.. 2017ல் மகனையும், மகளையும் கழுத்தை நெரித்து கொன்றாராம். 2019ல் இன்னொரு குழந்தையை விஷம் வைத்து கொன்றாராம். இப்போது கடைசி 2 குழந்தைகளையும் சாக்கடையில் மூழ்கடித்து கொன்றாராம்.

இப்படி 5 குழந்தைகளை அவர் கொன்றதாகவே அவரே சொல்கிறார். அதனால் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிகிச்சையும் தரப்பட உள்ளது… ஏன் குழந்தைகளை கொன்றீர்கள் என்று கேட்டால், அவங்களை வளர்க்க தன்னிடம் காசு இல்லை, அதனால் கொன்றதாக சொல்கிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர் போலீசார்.

தன்னுடைய 5 குழந்தைகளையுமே பெற்ற தந்தை 4 வருஷத்தில் கொன்றது அரியானவையே அலற வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.