அந்தமானின் கடற் பகுதியில் அடுத்த 3 நாட்களில் தென் மேற்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தொடர்ந்து, கேரளாவில் வரும் 29 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின் படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் இருக்கும் என்றும், இந்த மழைப்பொழிவானது வழக்கமான கால கட்டமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடல் பகுதியில் உருவாக உள்ள புயல், தெற்கு ஓமனை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.




