மத்திய அரசின் கறார் நடவடிக்கையால் 2,100 பெரிய நிறுவனங்களின் ரூ.83 ஆயிரம் கோடி வராக்கடன் தொகை வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள், தேசிய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். இதுபோன்ற முறைகேடுகளால், பொதுத் துறை வங்கிகளில் வசூலிக்கப்படாமல் போன வராக் கடன் அதிக அளவில் சென்றது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நிறுவனங்களுக்கான ஐ.பி.சி எனப்படும் புதிய திவால் விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், எஸ்ஸார், பூஷண் குழுமம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடும் சிக்கலைச் சந்தித்தன. அவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால், அந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டன.
இந்நிலையில், வங்கிகளில் அந்த நிறுவனங்கல் வாங்கிய கடனை அவை திருப்பிச் செலுத்தியுள்ளன. இவ்வாறு சுமார் 2,100 நிறுவனங்கள் ரூ.83 ஆயிரம் கோடிக்கான கடனை வங்கிகளில் திருப்பிச் செலுத்தியுள்ளனவாம்.




