
சென்னை,
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது குறித்தும் அவர்களுக்கு கொறடா நோட்டீஸ் அனுப்பியதால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் வந்து ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.



