அனிதா தற்கொலைக்கு காரணம் திமுக; இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: கிருஷ்ணசாமி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

சென்னை:
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குக் காரணமாக அமைந்தவர் திமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,  அரியலூர் மாவட்டச் செயலாளர்  சிவசங்கர்தான். இதுகுறித்து சிபிஐ., விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

நீட் தேர்வு எழுதி அதில் தேர்வாகாமல் போனதால், நீட் தேர்வு தன்னுடைய மருத்துவ கனவைச் சிதைத்து விட்டது என்ற விரக்தி நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து காட்சி ஊடகங்கள் நடத்திய விவாதங்களில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சித் தலைவரும் மருத்துவருமான டாக்டர் கிருஷ்ணசாமி வித்தியாசமான கருத்தைத் தெரிவித்தார். ஊடகங்கள் கருத்துகளைப் புகுத்துவதாகக் குற்றம்சாட்டினார். புதிய தலைமுறை விவாதத்தில் கார்த்திகைச் செல்வன், நீங்கள் எந்த அடிப்படையில் மருத்துவரானீர்கள் என்று கேட்டபோது, “நீங்கள் எந்த அடிப்படையில் ஊடகப் பணிக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

நியூஸ் 18 விவாதத்தில் குணசேகரன், ‘பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடுகிறீர்களே, மத்திய மாநில அரசுகள் நீட் குறித்து இறுதி வரை சரியான வழிகாட்டுதலை தரவில்லையே?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணசாமி, ‘நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்?” எனப் பதிலளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அனிதாவின் தற்கொலைக்கு அனுதாபம் தெரிவிக்கலாமே தவிர, அங்கீகாரம் அளிக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரே வழிதான். அப்படியிருக்கும்போது, அனிதாவிற்கு மட்டும் தனி வழி கிடையாது. அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என்று தெரியவில்லை. இறந்து போன நீட் போராளி அனிதா – வீடியோ தற்கொலைக்கான காரணம் தெரியாமலேயே அது வேறு ஒன்றோடு முடிச்சுப் போடப்படுகிறது” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதாகவும், பாஜகவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். “தமிழக அரசியல் கட்சிகள் மாணவர்களை வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்விற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடிகர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது” எனக் கூறியிருந்தார்.

[su_youtube url=”https://youtu.be/1YNXfZmz1-c” width=”720″ autoplay=”yes”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.