பொதுக்குழுவை சமாளிப்பது எப்படி?: சசிகலாவை சந்திக்கிறார் டி.டி.வி.தினகரன்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் பொதுக் குழுக் கூட்டத்தை சமாளிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, சசிகலாவை சந்திக்கிறார் டிடிவி தினகரன்.

பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாளை சந்தித்துப் பேச உள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க.வின் (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் தினகரன் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார். தற்போது நாளை மீண்டும் அவர் சசிகலாவை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ள பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்தும், எடப்பாடி நடத்திவரும் எம்.எல்.ஏக்கள் சந்திப்புக் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார் தினகரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.