அறந்தாங்கி ஆஞ்சநேயர் கோவிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

Published:

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர்
கோயிலில் மழைவேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.

அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஸ்வருப
ஆஞ்சநேயர்கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்திலேயே விநாயகர்சன்னதியும் 32 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது.

இக்கோயிலில் நடைபெற்றசிறப்பு வழிபாட்டை முன்னிட்டு முன்னதாக கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட அதனை தொடர்ந்து தீப ஆராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மழைவேண்டி கூட்டுபிரார்த்தனை செய்தனர்.

இதில் புதுக்கோட்டை,தஞ்சாவூர்,ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர். வழிபாட்டை முன்னிட்டு அறந்தாங்கி
அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img