
ராஜபாளையத்தில் இன்று பாரத பிரதமர் மோடி 72 வது பிறந்த தினம் முன்னிட்டு பாஜகவினர் 72 தேங்காய் உடைத்து, 1500 பேர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரத பிரதமர் மோடி 72வது பிறந்த தினம் முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் ஆதிவழி விடு விநாயகர் கோவிலில் மோடி பல்லாண்டு நலமுடன் வாழ . நகர பொது செயலாளர் பிரேம்ஜி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ கோபால்சாமி முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின் 72 தேங்காய் உடைத்தும், 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சந்திரராஜா, விவசாய அணி மாவட்ட துணை தலைவர் ஸ்ரீகாந்த், அரசு துறை சார்ந்த நகர செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.





