செங்கோட்டையில் திருமாவளவனை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்

Published:

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிச.6ம் தேதி அன்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், புத்த விஹார்களை இடித்துதான் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன எனவே கோயில்களை இடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சைக் கண்டித்து, தமிழகம் முழுதும் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திருமாவளவனை கைது  செய்ய வேண்டும் என்றும், மத மோதல்களை ஏற்படுத்தும் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அதன் ஒரு பகுதியாக, செங்கோட்டை நகரின் கீழ பஜார் பகுதியில், பாஜக.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related articles

Recent articles

spot_img