சென்னையில் நாளை தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
aathar
aathar

சென்னையில் நாளை முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகின்றது. அதனால் புதிய ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைப்பேசி எண் திருத்தம், 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்.

திருத்தங்களுக்கு 50 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். புதிய ஆதார் பதிவுக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை. அதனால் ஆதார அட்டைகளில் திருத்தம் செய்து கொள்ள விரும்பினால் நாளை அனைவரும் தபால் நிலையம் சென்று மாற்றிக் கொள்ளுங்கள். புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்யவும் முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.