
ம்துரை சோழவந்தானில் பாஜக., மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது!
சோழவந்தான் பகுதிக்கு பாஜக மாநிலத்
தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வருகை புரிந்தார். அவரை பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி என்ற முத்தையா தலைமையில், பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் அதிர்வெட்டிகள் முழங்க வரவேற்றனர்.
முன்னதாக, சோழவந்தான் அருகே ஊத்துக்குளி, தென்கரை ஆகிய இடங்களில் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து அண்ணாமலையை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சோழவந்தான் நகரில் முக்கிய வீதி வழியாகச் சென்று சோழவந்தான் அய்யவார் பொட்டலில் அவருக்கு,
பாஜக தொண்டர்கள் மீண்டும் வரவேற்பு கொடுத்தனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை சோழவந்தானுக்கு வருகை தருவதை முன்னிட்டு சோழவந்தான் நகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாஜக., தொண்டர்கள் அண்ணாமலை மீது பூமாரி பொழிந்தனர். ஏராளமான பெண்கள் பூத் தூவி அண்ணாமலையை வரவேற்றனர்.
என் மண் என் மக்கள் யாத்திரை ( அண்ணாமலை) மதுரை மாநகர் பயணம் விவரம்
வடக்கு தொகுதி நடை பயணம்
நாளை சனிக்கிழமை (05-08-23) காலை 9 மணி
இடம்: ரிசர்வ் லைன் நான்கு முனை சந்திப்பு, அம்மன் உணவகம் அருகில்
மத்திய தொகுதி நடை பயணம்
நாளை சனிக்கிழமை (05-08-23) மாலை 4 மணி
இடம்: வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை
தெற்கு தொகுதி நடைபயணம்
நாளை சனிக்கிழமை(05-08-23) மாலை 5:30 மணி
இடம் : விளக்குத்தூண் காமராஜர் சிலை
06-08-23 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள்
மேற்கு தொகுதி நடை பயணம்
ஞாயிற்றுக்கிழமை (06-08-23) 4 மணி
இடம்: ஜல்லிக்கட்டு ரவுண்டானா ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
மாபெரும் பொதுக்கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை (06-08-23) மாலை 5.30 மணி
இடம்: பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் எதிரில்
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் நடைபெறும். எனவே மதுரை மாநகர் பாஜகவை சார்ந்த அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
– மதுரை மாநகர் பாஜக