December 6, 2025, 5:13 PM
29.4 C
Chennai

ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் – ஒரு லட்சம் ராக்கி தயாரிப்பு!

karur barani park school rakky preparation - 2025

ஏழாவது ஆண்டாக இராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் ராக்கி… பரணி பார்க் கல்விக் குழுமம் சார்பாக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி தொடக்கம்

ஏழாவது ஆண்டாக பரணி பார்க் சாரணர் மாவட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி 01.08.23 முதல் பரணி பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். தேசிய மாணவர் படை தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் தலைமை அதிகாரி லெப்டிணன்ட் கர்னல் அருண் குமார் ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்ரமணியன் கூறுகையில், “நாம் அனைவரும் நமது நாட்டின் முப்படைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நமது வீரர்கள் இல்லாமல் நாம் ஒருபோதும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியாது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது.

கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம். 2017 இல் 15000 ராக்கிகள், 2018 இல் 16000 ராக்கிகள், 2019 இல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020 & 2021 இல் ஒவ்வொரு ஆண்டும் 25000 ராக்கிகள் அனுப்பப்பட்டன (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன).

கடந்த 2022 ஆம் ஆண்டு 1,50,000 ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் திருக்குறள் ராக்கிகளை தயார் செய்து வருகிறோம். திருக்குறள் எண் 766ஐ 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பதித்துள்ளோம்.” என்று கூறினார்.

இந்நிகழ்வில் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories