அதிர்ச்சி! சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சினிமா சென்னை
indra-kumar1-1
indra-kumar1-1

கடந்த சில மாதங்களாகவே சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இத்தகைய சூழலில், பெரம்பலூரை சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இந்திரகுமார் என்பவர் நடித்து வந்துள்ளார்.

பெரம்பலூரில் நேற்று இரவு நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டில் அவர் தனியாக தூங்கியுள்ளார்.

indra-kumar-1
indra-kumar-1

அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இந்திரகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்த உடன் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையில் உயிரிழந்த இந்திரக்குமாருக்கு,மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.