நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்கள் சுமார் நாற்பது வேன்களில் 600-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அங்கே சென்று இரவில் தங்கி உள்ளனர் மாலை சுமார் 6 மணிக்கு மேல் வேன்கள் அனைத்தையும் கீழே செல்லுமாறு வனக் காவலர்கள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் வேன் டிரைவர்கள் இரவு நேரம் ஆகிவிட்டபடியால் நாளை கோவிலில் இருப்பவர்கள் மாலை கீழே இறங்கி விடுவார். எனவே இன்று இரவு மட்டும் தங்குவதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப் படவே, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு டிரைவர் வனக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட, இதை அடுத்து அனைத்து ஓட்டுநர்களும் காவல் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மணிமுத்தாறு காவல்துறையினர் விரைவாக அங்கு வந்து இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்து வைத்து, வேன் டிரைவர்கள் அனைவரும் நாளை காலை இங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம் என்று கூறிய பின்னர், அனைத்து வேன் டிரைவர்களும் தங்களுடைய வாகனங்களை பாபநாசம் செக் போஸ்ட் அருகே நிறுத்தி வைத்தனர்.




