புண்ணிய பாரத பூமியின் ரத்னமாம் பக்தர்களை கருணையோடு பால் நினைந்தூட்டும் தாயினும் சால பரிந்து அருளும் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி அவர்களின் ஜெயந்தி மஹோத்சவம் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
ஸ்ரீடிவி குருபக்தியோடு ஸ்ரீ அம்மாவின் திருப்பாதத்தில் அம்மாவை போற்றி சில பாடல்களும், அம்மாவின் சத் சரித்திரத்தை ஹரிகதையாகவும் சமர்பிக்க இருக்கிறது.
அம்மாவின் ஜெயந்தி தினமான செப்டம்பர் 27ஆம் தேதி அன்று திருமதி சிந்துஜா சந்திரமௌலி அவர்களின் குரலில் அம்மாவின் சத் சரிதத்தை ஹரிகதை வடிவில் ஸ்ரீ டிவி ஒளிபரப்ப இருக்கிறது. அந்த வைபவத்தை பக்தியுடன் வரவேற்க இந்த பாடல்களை பக்தியுடன் கேட்டு பக்தி வெள்ளத்தில் நாமும் இணைவோம்.



