அக்னி நட்சத்திரம் தொடங்கி இரு நாட்களே ஆன நிலையில் தமிழகத்தில் பரவலாக வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை நிலவரப்படி,14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது.
வேலூர் – 110
திருச்சி – 108
திருத்தணி – 108
தஞ்சாவூர் – 105.5
மதுரை விமான நிலையம் – 105.08
சென்னை விமான நிலையம் – 102.38
பரங்கிப்பேட்டை – 101.66
நாமக்கல் – 100.4
நெல்லை – 105.44
சேலம் – 103.28
கடலூர் – 100
கரூர் பரமத்தி – 106
காரைக்கால் – 101
நாகை – 102
– என்று 14 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெய்யில் பதிவானது.
இருப்பினும், வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது… என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




