வெளிநாட்டு கரன்சியை கடத்த முயற்சித்த நூர்முகம்மது சுல்தான்! பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்!

Published:

kaithu
kaithu

துபாய்க்கு கடத்த முயன்ற, 70 லட்சம் ரூபாய் மதிப்பு, அமெரிக்கா, சவுதி நாட்டு கரன்சிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையிலிருந்து நேற்று அதிகாலை, 5:05 மணிக்கு, ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகருக்குச் செல்லும், ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, நுார் முகமது சுல்தான், 60 என்பவரை, சுங்கத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர்.

அதில், அவரது பான்ட் பாக்கெட் மற்றும் உடைமைகளுக்குள் இருந்த பழைய புத்தகங்களுக்குள் இருந்து, அமெரிக்கா டாலர் மற்றும் சவுதி ரியால் கரன்சிகள், இந்திய ரூபாய் மதிப்பில், 70.28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாட்டு கரன்சிகள் கடத்திய நபரை கைது செய்து, சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img