திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி! பெற்றோர் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி
register-marriage
register-marriage

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் மருங்காபுரி பகுதியில் வசிக்கும் பவானி என்ற நர்சிங் படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் முசிறி பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

அதன்பின் காதல் ஜோடி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்களது பெற்றோரை காவல்துறையினர் அழைத்து பேசி கார்த்திக்கின் பெற்றோரை சமாதானம் செய்துள்ளனர்.

ஆனால் பவானியின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் மணமக்களை கார்த்திக் பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.