பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்! சின்னத்திரை அதிர்ச்சி!

Published:

vengatesh - 2026

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக இன்று மதியம் 2.30 மணியளவில் காலமானார்.

தமிழில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ். அதை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்து பலருடைய மனங்களிலும் இடம்பிடித்தார்.

பெரும்பாலான சீரியல்களில் கிராமத்து தந்தையாக நடிப்பதற்கு முதல் தேர்வாக இருப்பதும் வெங்கடேஷ் தான். சன் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்டி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சியில் மட்டும் ஈரமான ரோஜாவே மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் பலர், வெங்கடேஷின் மறைவுக்கு அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img