
கொரோனா பரிசோதனைக்கு வீடு வீடாக சென்று மாதிரிகளை சேகரிக்க சென்ற சுகாதாரத்துறை ஊழியர்களிடம் பரிசோதனைக்கு மறுத்து தகராறு செய்த குடும்பத்தினர் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்ய மாதிரிகளை சேகரிக்க சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் கோவை காந்திபுரம் மூன்றாவது எக்ஸ்டன்ஷன் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த உரிமையாளர், தங்கள் வீட்டில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும், சுகாதாரத்துறை ஊழியரின் செல்போனை வாங்கி வீசி தகராறில் ஈடுபட்டார். மேலும் அங்குள்ள பொருட்களை ஆத்திரத்தில் தூக்கி எரிந்து ரகளையில் ஈடுபட்டார்
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.