17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! திமுக நிர்வாகி தலைமறைவு!

Published:

vankodumai - 2026

செம்பாக்கத்தில் தந்தையை இழந்து, தாய் மற்றும் சகோதரியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த 17 வயதான சிறுமியை ஏழ்மையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

குடும்ப ஏழ்மையின் காரணமாக பிழைக்க வேலை தேடி வந்துள்ளார் இதனை அறிந்த தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர் தனது அலுவலகத்தில் அந்த சிறுமிக்கு வேலை தருவதக ஆசை வார்த்தை காட்டி அந்த சிறுமியை ஏமாற்றியுள்ளார்.

குடும்ப ஏழ்மை குறையுமே என அங்கே வேலைக்கு சேர ஒப்புக்கொண்ட சிறுமியை வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

dhanadekaran
dhanadekaran

மேலும் அந்த சிறுமிக்கு மது கொடுத்து அந்த மயக்கத்தில் இருக்கும் போது தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார்.

பின்பு சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். கார்த்திக்கை நம்பிய அந்த சிறுமி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தன்னிடம் காதல் வயப்பட்ட சிறுமியிடம் ஆசை வார்த்தைப் பேசி கார்த்திக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டி அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

சிறுமியை தான் வீடியோ எடுத்து வைத்திருப்பது குறித்து கார்த்திக் தனது நண்பரான மணிகண்டனிடம் கூறியுள்ளார். அவரும் கார்த்திக்குடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வாறு தினமும் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். உடனே பிரச்சனை ஆகிவிடும் என்று செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று 18 வயது ஆகிவிட்டது என பொய் கூறி அந்த சிறுமியின் கருவை கலைத்துள்ளார்.

அவர்கள் மூவரும் சிறுமியுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களை காட்டி மிரட்டியும் வந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டில் இருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இவ்வாறு தான் மட்டுமல்லாது தன் நண்பர்கள் மற்றும் தன்னுடன் சேர்ந்தவர்கள் என 30 பேரை அந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள வைத்து அந்த சிறுமியை நாசமாக்கியுள்ளார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதனையறிந்த அந்த ஏழை குடும்பத்தினர் தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர் தனசேகரனை நியாயம் கேட்டுள்ளனர். தன் கட்சி மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் மிகவும் பயந்துபோய் அமைதியாக இருந்துவிட்டனர்.

இதனையறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என தி.மு.க சமூக வலைதள நிர்வாகி தனசேகரன் தன் அரசியல் செல்வாக்கு மூலம் அந்த ஏழை குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதை தொடர்ந்து அந்த குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்தப் புகாரின் பேரில் மணிகண்டனையும் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான தனசேகரை தேடி வருகின்றனர். திமுக நிர்வாகியால் ஓராண்டுக்கு மேலாக சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img