பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Published:

kv anand
kv anand

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.

கே.வி.ஆனந்துக்கு நேற்று இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார்.

கேவி ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார்.

ரஜினி நடித்த ‘சிவாஜி’ உள்பட பல திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தவர். ‘அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவேக்கை இழந்த திரையுலகம் அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே தற்போது கேவி ஆனந்த் அவர்களை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கடந்த 1995ஆம் ஆண்டு ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற கேவி ஆனந்த் அவர்கள் கடைசியாக சூர்யா நடித்த ‘காப்பான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

இதனால் திரைஉலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இவர் மறைவு திரை உலகின் மிகப் பெரிய இழப்பு என்று திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img