டீச்சர் காதலியைப் கொன்று விட்டு வக்கீல் தற்கொலை!

Published:

hari krishnan
hari krishnan

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் கற்பகநகர் அருகே ஆறுமுக நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். 45வயதான இவர் தனது 35 வயது மனைவி விஜியை விவகாரத்து செய்துவிட்டு 10 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார்

அவர் வசிக்கும் பகுதியில் இருந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். அவரிடம் ஹரிகிருஷ்ணனின் மகள் யோகா பயின்று வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சென்று வந்தபோது சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி சந்திந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம்தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மாயமானார். இதனையடுத்து, சித்ரா தேவியின் தந்தை காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

எங்கெல்லாமோ தேடிப்பார்த்த சித்ராவின் தந்தை கண்ணயா, கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். தனது மகளுக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவர்களிருவரும் பேசிய ஆடியோவை போலீசிடம் கொடுத்து, சித்ராவை ஹரிகிருஷ்ணன் கொலை செய்திருக்கலாம் என்றும் தனது சந்தேகத்தை போலீசிடம் சொன்னார் கண்ணையா. மதுரை காவல் ஆணையரிடமும் புகார் தெரிவித்து பார்த்த கண்ணையா, நடவடிக்கை எதுவும் இல்லாததால், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்து பார்த்துவிட்டார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கண்ணயா சொல்லி வந்த நிலையில், நேற்று ஹரிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

chitra
chitra

விவகாரம் பெரிதாகி சித்ராவை போலீஸார் தேடிவரும் சமயத்தில், சித்ராவை கொலை செய்து வீட்டு கழிவறையில் புதைத்து வைத்திருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்.

அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து குளியலறையில் புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டனையை கொடுத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். சித்ராவின் டூ வீலரை மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் விட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் மதுரை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related articles

Recent articles

spot_img