பிரபல பாடகியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட சிறுவன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
chinmayee
chinmayee

இன்ஸ்டாகிராமில் சினிமா பாடகியான சின்மயியிடம் சிறுவன் ஒருவன் “எனக்கு பாலியல் உணர்வு ஏற்பட்டிருப்பதால் உங்களில் நிர்வாணப் படங்களை அனுப்புங்கள்” என்று கேட்டுள்ளான். அதற்குக் கோபமடையாமல் சின்மயி பொறுமையாகப் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், “உங்களுக்கு பாலியல் உணர்வு எழுந்தால் சுய இன்பம் செய்யுங்கள். அது குறித்து எதுவும் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்கள் சுய இன்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.

சுய இன்பம் செய்வது தவறான விஷயம் இல்லை. எனினும் உங்களின் தேவைக்காக சமூக வலைதளங்களில் பெண்களிடம் நிர்வாணம் கேட்பது தவறானது. அது பாலியல் குற்றம்.

இதனால் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பெற்றோருக்கும் சின்மயி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அவரின் ட்வீட்களில், “நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையுடன் மனம் திறந்து பேசுங்கள். அவர்களுக்கு உடலுறவு என்றால் என்ன, அதற்கு பெண்களின் சம்மதம் தேவை ஆகியவை குறித்து புரிய வையுங்கள். உங்களுக்கு கூச்சமாக இருந்தால் பாலியல் சந்தேகங்களைத் தீர்க்கும் ஆலோசகர்களிடம் உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள்.

பாலியல் கல்வி மீது இருக்கும் வெட்கத்தை விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் ஃபார்ன் வீடியோக்களை பார்த்தாலோ, சுய இன்பம் செய்தாலோ அவமானமாக கருதாதீர்கள்.

உங்களின் பாலியல் கல்வி மீதான பயத்தால் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்குள்ளாகுகின்றனர். பாலியல் கல்வி ஆரோக்கியமானது. இது உங்கள் குழந்தையின் நற்குணங்களைக் கெடுக்காது. அவர்கள் உடனடியாக உடலுறவு கொள்ள மாட்டார்கள். உங்கள் குழந்தைகள் பாதுகாப்பான/பாதுகாப்பற்ற தொடுதலைப் பற்றி கற்றுக்கொள்வார்கள். உங்கள் குழந்தை பாலியல் வன்முறைக்குள்ளானால் அந்த நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியாது. அதற்கு பாலியல் கல்வி அவசியமான ஒன்று. தயவுசெய்து ஒரு சிறந்த பெற்றோராக இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.