தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
rajini
rajini

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனக்கான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர்.

மேலும், கொரோனாவின் இரண்டாம் அலையில் பல்வேறு அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் என முக்கியமான பல பிரமுகர்கள் மறைந்துவிட்டனர். எனவே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனக்கான தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.