கோவிலில் கண்மூடி வழிபாடு செய்த குரங்கு! வைரல் வீடியோ!

Published:

monkey vazhipadu in temple
monkey vazhipadu in temple

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோயில் காஞ்சிப் பெரியவர் வந்து வழிபாடு செய்த ஸ்தலம். இக்கோவிலின் அருகில் ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. கோவிலுக்கு சென்று பக்தர்கள் அளிக்கும் பழங்களை உண்ணுவது வழக்கம்‌.

இந்நிலையில் இன்று கோவிலுக்குள் வந்த குரங்கு ஒன்று சிவபெருமானை நோக்கி கண்களை மூடியபடி வழிபாடு செய்தது. கொரோனா என்ற கொடுந்துயரில் இருக்கும் மனிதர்களை காப்பாற்ற வேண்டியதா? இல்லை கோவில்களுக்கு இன்று நேர்ந்திருக்கும் கொடுமைக்காக மனம் குமுறியதா? என்று தெரியவில்லை.

சிவபெருமானிடம் குரங்கு வழிபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பொதுவாக குரங்குகள் மனிதரைப் போல பார்த்து நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அதனால் இது மனிதர்களைக் கண்டு இவ்வாறு வழிபாடு செய்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மனிதனிடமிருந்து விலங்குகள் நல்லனவற்றைக் கற்றுக் கொள்கின்றன. மனிதன் தான் விலங்காகிக் கொண்டே போகிறான்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img