கடைக்கு வந்த சிறுமிகளை கடித்து பாலியல் தொல்லை! ஊராட்சி மன்ற கிளார்க் கைது!

Published:

Chandrasekhar lalkudi
Chandrasekhar lalkudi

லால்குடி அருகே குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்த பஞ்சாயத்து கிளார்க் சந்திரசேகரை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பல்லபுரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் அழகுராஜா (35) பிரபாவதி (28) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது, இதே போன்று அதே தெருவில் வசித்துவரும் சசிகுமார் (45) பிரியா (38) இவர்களுக்கு 9 வயது உள்ள ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

அதே ஊரில் மாரியம்மன் கோவில் தெருவில் பல்லபுரம் ஊராட்சி மன்ற கிளர்க் சந்திரசேகர் (53) தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் வீட்டிலிருந்து அழகுராஜாவின் 6 வயது உள்ள மகளும், சசிகுமாரின் 9 வயது உள்ள மகளும்,
இரண்டு பெண் குழந்தைகளும் சந்திரசேகர் நடத்திவரும் பெட்டி கடைக்கு தின்பண்டங்கள் வாங்க சென்று உள்ளனர்.

அப்போது சந்திரசேகர் அந்த இரண்டு பெண் குழந்தைகளிடமும் ஆசை வார்த்தை கூறி சாக்லேட் கொடுத்து அந்த குழந்தைகளிடம் உதடு மற்றும் மார்பகங்களில் கடித்து சந்திரசேகர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த நிலையில் கடை சென்ற குழந்தைகள் வெகு நேரமாகியும் வீட்டிற்க்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர்,

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அப்பொழுது வாய் மற்றும் உடலில் காயங்களுடன் அழுது கொண்டு வந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளிடம் விசாரித்தபோது,
சந்திரசேகர் தகாத முறையில் நடந்தது கூறியதை அடுத்து கோபம் கொண்டு பல்லபுரம் பஞ்சாயத்து கிளார்க் தேடிச் சென்றனர், ஆனால் பஞ்சாயத்து கிளார்க் சந்திரசேகர் தப்பி ஓடி சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமுற்ற இரண்டு குழந்தைகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் வழக்குப் பதிவு செய்து பஞ்சாயத்து கிளார்க் சந்திரசேகரை கைது செய்தனர்.

மேலும் பல்லபுரம் கிராம மக்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img