நீரழிவு நோய் உள்ளவர்கள்.. கொரோனாவில் மீண்டவர்கள்.. கண்களில் கவனம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நலவாழ்வு மதுரை
eye - 2026

சர்க்கரை நோயாளிகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் கொரோனாவால் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது,” என, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் உஷா கிம் கூறினார்.

அவர் கூறியது, இம்மருத்துவமனைக்கு பூஞ்சை தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகம் வருகின்றனர். ஓராண்டில் வரும் நோயாளிகளின் எண்ணிகையைப் போல வாரந்தோறும் அதிகம் வருகின்றனர். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்து கொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது.

கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அல்லது சிவந்து காணப்படுதல், முகத்தில் வலி, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி நிறம் மாறுதல், திடீர் பார்வையிழப்பு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், மூக்கில் நீர் அல்லது ரத்தம் வடிதல் போன்றவை தொற்றின் அறிகுறிகள்.

கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் காது, தொண்டை, கழுத்து நிபுணர், கண் டாக்டர் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் மூலம் குணப்படுத்தலாம். முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.