December 6, 2025, 5:38 AM
24.9 C
Chennai

தடகள பயிற்சியாளர் மீது பாலியல் புகார்! தற்கொலை முயற்சியில் மருத்துவமனையில் அனுமதி!

nagaraj
nagaraj

சென்னையில் அடுத்தடுத்து 2 பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மாணவிகள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த சம்பவங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில், சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு நேற்று காலை வந்த, 19 வயது பெண் ஒருவர் தட களப் பயிற்சியாளரான நந்தனம் நாகராஜன்(59) (இவர் ஜிஎஸ்டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர்) மீது புகார் அளித்தார்.

அதில், “2013 முதல் 2020 வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பயிற்சியாளர் நாகராஜனிடம் தட களப் பயிற்சி பெற்றேன்.

இந்நிலையில், நாகராஜன் சில நாட்கள் சக பயிற்சியாளர்களை அனுப்பிவிட்டு, பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி என்னை மட்டும் வளாகத்தில் உள்ள அறையில் அமரவைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதேபோல, மேலும் சில பெண்களிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

நான் ஒத்துழைக்காததால், எனது தடகளப் பயிற்சியை நிறுத்தினார். மேலும், பிரச்சினை செய்தால், என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகவும், என்னைப் பற்றி தவறான தகவலைப் பரப்பி, எந்த போட்டியிலும் கலந்துகொள்ள விடமாட்டேன் எனவும் மிரட்டினார். இதனால் மன உளைச்சலுடன், எனக்கு நடந்ததை யாரிடமும் கூறாமல் இருந்தேன்.

பயிற்சியாளர் நாகராஜன் என்னைப் பற்றி அனைவரிடமும் அவதூறாக கூறிய நிலையில், எனது பெற்றோர் வேறு மாவட்டத்துக்கு பயிற்சி பெற என்னை அனுப்பி வைத்தனர். எனவே, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நாகராஜன் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் மற்றும் போக்சோ பிரிவில் நேற்று மாலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் நாகராஜன் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயிற்சியாளர் நாகராஜனின் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் எச்.ஜெயலட்சுமி (9444772222) தெரிவித்துள்ளார். புகார் கொடுப்பவர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories