கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசுக்கு உதவிய ஈஷா!

Published:

isha
isha

ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவை கடந்த ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.

isha-sathguru
isha-sathguru

அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 பி.பி. இ.கிட்கள், 5,000 N95 முக கவசங்கள், 500 CPAP முக கவசங்கள் ஆகியவை ஈஷா சார்பில் வழங்கப்பட்டன.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

கோவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் திரு.ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. திரு. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்

Related articles

Recent articles

spot_img