auto driver
auto driver

கொரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே பிணத்தைக் கூட அடக்கம் செய்ய முடியாத அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதனைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை கடைபிடித்தால் கொரோனா கட்டுக்கு வந்துவிடும். ஆனால், ஆங்காங்கே மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களிடம் வம்பிழுப்பது, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள இந்த நிலைமையிலும் நமக்காக உயிரையும் பணையம் வைத்து இரவு, பகல் பாரமல் காவல் காக்கும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது என சில மக்கள் அராஜாகம் செய்வது தொடர்கிறது.

boy
boy

நேற்று சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்களை பெண் வழக்கறிஞர் மிரட்டிய வீடியோ வெளி வந்த நிலையில், இன்று காலை பிராட்வே ரோட்டில் ஆட்டோ டிரைவர் ஒருவர், பெண் உதவி ஆய்வாளரை அநாகரிகமாக பேசியுள்ளார்.

நீ நாசமா போய்டுவ அல்லா மேல் ஆணைனு .. நல்ல சாவு வராது.. அசிங்கமான வார்த்தைகள்… ரொம்ப கேவலமா போலிஸ்னு மதிக்காம பெண் என்றும் மதிக்காமல் நடுரோட்டில் குதித்தார் அந்த ஆட்டோடிரைவர்.

எது இவர்களுக்கு பின்புல பலத்தைத் தருகிறது?

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending