பிரபல இசையமைப்பாளர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை
muralitharan - 2026

பிரபல இசையமைப்பாளரான டிஎஸ் முரளிதரன் காலமானார்.

சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன். இவரது இசையில் வெளியான வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் பெரும் ஹிட்டானது.

டிஎஸ் முரளிதரன் தமிழ் மட்டுமின்றி கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இரண்டே பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி டிஎஸ் முரளிதரன் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் டிஎஸ் முரளிதரன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று சென்னை சாலி கிராமத்தில் நடைபெறுகிறது.

ALSO READ:  இளசுகளுக்கு சளைத்ததில்லை... செல்போன் டவரில் ஏறிய மூதாட்டி!

Posts by Suprasanna Mahadevan: