நீர்வள. நிலவளத்திட்ட களப்பணி மேற்பார்வையாளர் பணியிடத்துக்கான நேர்காணல் 17ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள நீர்வள , நிலவளத் திட்டப் பணிகளுக்காக வெளிச்சந்தையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தற்காலிக அடிப்படையில் களப்பணி மேற்பார்வையாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி பி.எப். எஸ்.சி அல்லது எம்.எப். எஸ்.சி அல்லது மரைன் பயாலஜி அல்லது அக்ரிகல்ச்சர் சுவாலஜி அல்லது டிப்ளமோ இன் பிஸ்சரிஸ் ஆகும்.
பணிக்காலம் 30.6.2015 உடன் முடிவடைகிறது. இப்பணிக்கான மாத தொகுப்பூதியம் ரூ.10,000- மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 17ம் தேதி காலை 11 மணிக்கு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், (தொலைபேசி எண். 0462 -2581488.) சி-42, 26-வது குறுக்குத் தெரு, மகாராஜா நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியில் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து்ளார்.