தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் இரட்டை ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் நரிக்குறவர் இன பெண் ஒருவர்.
பட்டுக்கோட்டை அடுத்த கோட்டாகுடி கிராமத்தில் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த தியாகராஜன், பெரியஆச்சி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன.
மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெரியாச்சி பிரசவ வலியால் துடித்த போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மனிதாபிமான அடிப்படையில் பெரியாச்சியை பேருந்தில் அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் பெரியாச்சிக்கு பேருந்திலேயே இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் சேர்க்கப்பட்டு தற்பொழுது தாயும் இரண்டு ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.




