சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை தேர்தலுக்கு கட்சி தயாராக வேண்டும், அதற்கு தாராளமாக நிதியளியுங்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கட்சித் தொண்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதல் ஆளாக கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, தேர்தல் நிதி வழங்கினார். இதை அடுத்து, திமுகவுக்கு தேர்தல் நிதி வசூல் அமோகமாகத் துவங்கியது. ஸ்டாலினைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு, தலைமை நிலையச் செயலர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் என தி.மு.க., பிரமுகர்கள் வரிசையில் நின்று, கருணாநிதியிடம் தேர்தல் நிதி வழங்கினர். ஒரே நாளில் தேர்தல் நிதியாக பல லட்சம் வசூலாகி உள்ளது. முன்னதாக, கருணாநிதி தன் அறிக்கையில், ‘என்னையும், அன்பழகனையும், ஸ்டாலினையும் சந்திக்க வரும் தொண்டர்கள் சால்வை, மாலைகளை அணிவிக்க வேண்டாம்; பதிலாக, 100 ரூபாய், 200 ரூபாய் கொடுங்கள்’ என அன்புக் கட்டளை விதித்திருந்தார்.
கருணாநிதியின் கோரிக்கை: முதல் ஆளாக நிதி அளித்தார் பொருளாளர் ஸ்டாலின்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

