இலங்கை வந்தார் நரேந்திர மோடி: அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

உலகம்

modi-lankaகொழும்பு : மொரீஷியஸ் நாட்டில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தார். அவருக்கு இன்று அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்புடன் குண்டுகள் முழங்க, அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் வரவேற்றனர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுமுறையில் இந்தியக் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு செல்வது இதுவே முதல்முறை. இன்று, இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசும் பிரதமர் மோடி இருதரப்பு உறவு 13-வது சட்டத் திருத்தத்தின் படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், மீள் குடியேற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார். அப்போது பிரதமர் மோடிக்கு சிறிசேனா விருந்தளித்து கெளரவிக்கிறார். இதனை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணம், அனுராதபுரம், கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார். modi-srilanka

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.