சென்னை: பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (13.03.2015) காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய இரு தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர்; இணைந்து பணியாற்றியவர். எனக்கும் நல்ல நண்பராக திகழ்ந்தார். ஊழல், பணத்தாசை ஆகியவற்றின் நிழல் கூட தம்மை நெருங்காமல் பார்த்துக் கொண்டவர். இளம் வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இறுதி வரை அரசியலில் இருந்தாலும் எளிமை ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டவர். சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழக அரசியலின் அனைத்து தகவல்களையும் தமது விரல் நுனியில் வைத்திருந்தவர். அவரது மறைவு தமிழக அரசியல் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் தி.சு. கிள்ளிவளவன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- கிள்ளிவளவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
