விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவன் மாணவியால் அதிர்ச்சி!

Published:

வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை கோனேரி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரின் மகன் முனிவேல் (17) வள்ளிப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திடீரென பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த அவரை சக மாணவர்கள் உதவியுடன் ஆசிரியர்கள் மீட்டு வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவி ஒருவர், முந்திய நாள் மாலை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img