அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்..

IMG 20221219 WA0064 - 2026

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் போதுமான அளவு குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இது வரை செய்து தரப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க பொது மக்கள் அளிக்கும் ரூ. 1800 வைப்பு தொகைக்கான ரசீது முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஏற்கெனவே ரூ. 5 ஆயிரம் வரை பணம் கட்டிய மக்களுக்கு பல மாதங்களாகியும் இது வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

பல தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக, கற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் புஷ்பவல்லியிடம் கேட்டதற்கு, அவர் முறையான பதிலளிக்காமல் பொது மக்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இன்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் தேங்கி நின்றதால் மாணாக்கர்களுடன், ஆலை தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஊராட்சி தலைவர் நேரில் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கை விட பொது மக்கள் மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சு வார்த்தை மூலம் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள், போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சமுசிகாபுரம் – முதுகுடி சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

IMG 20221219 WA0067 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories