
மதுரையில் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா இரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அறுபதுக்கும் மேலான பக்தர்கள் லக்னோ ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எதிர்பாராத தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை, படுகாயமடைந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள் ஈடுபட்டு, மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல், விமானம்
அனுப்பி வைப்பு...
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடலை இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மற்றும் எம்மாமிங் செய்யப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு சென்னை சென்று சென்னையிலிருந்து விமான மூலம் அவர்கள் சொந்த ஊரான லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என, ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பி மூர்த்தி ஆகூர் நிவாரணத்தை வழங்கினர் மேலும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அமைச்சர்கள் மூர்த்தி பல்வேறு தியாகராஜன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.