பாஜக நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது..

பாஜக நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது

500x300 1808906 3 - 2026

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் எதிரொலி- பாஜக நிர்வாகியை தாக்கியவர்கள் நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுராந்தகம் அருகே திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் துரை தனசேகரன் (வயது 46), பா.ஜனதா மாநில நிர்வாகி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்றார். கானகோயில்பேட்டை என்ற பகுதியில் சென்ற போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். உடனே தனசேகரன் காரைவிட்டு இறங்கி ஓடினார். அப்போது அந்த கும்பல் அவரை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த தனசேகரன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவ இடத்துக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர் புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்றார்.

இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற தனசேகரனை சந்தித்து ஆறுதல் கூறினார். தைரியமாக இருங்கள். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்றார்.

அதன்பிறகு அண்ணாமலை கூறுகையில், தனசேகரன் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஞ்சா விற்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட தமிழக பா.ஜனதா நிர்வாகி தனசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தனசேகரன் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் நள்ளிரவு போலீசில் சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் வக்கீல் அகமது பாஷா (வயது 33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான்(20), இப்ராகிம் (35) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரையும் இன்று காலை போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

https://www.maalaimalar.com/news/state/chairman-and-members-of-diaspora-tamils-welfare-board-appointed-chief-minister-mk-stalin-order-550695?infinitescroll=1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories