சென்னை:
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோட்டீஸ் கொடுக்க அனுமதித்த கோயில் இணை ஆணையர் இடை நீக்கம் செய்யப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
திருச்செந்தூரில் கோவில் வளாகத்தில் பாரதப் பிரதமரை விமரிசித்து நோட்டீஸ் கொடுக்க அனுமதித்த கோவில் JC ஐ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மகளிர் தினத்தன்று பாஜக மகளிர் நிர்வாகியை இழிவாக பேசி தாக்கிய அய்யாக்கண்னை காவல்துறை கைது செய்ய வேண்டும்

— H Raja (@HRajaBJP) March 8, 2018
திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் அய்யக்கண்ணு வால் தாக்கப்பட்ட நெல்லை அம்மாள் அவர்கள் புகார் கொடுத்தும் FIR பதியாத காவல்துறை ஆய்வாளர் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவ மனையில் சேர்கப்பட்டு அதற்கான மருத்துவ சான்றிதழ் தந்து் FIR பதியாத செயல் கண்டிக்கத்தக்கது – என்று கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று செந்தூர் கோயில் வளாகத்தில் அய்யாக்கண்ணு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதனை தடுத்து கேள்வி கேட்ட பெண் மீது கைகலப்பில் ஈடுபட்டனர் அய்யாக்கண்ணு குழுவினர். அந்த காணொளி (வீடியோ)…