ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலக்க வைத்திருந்த கன்றுக்குட்டி கறி: 7 பேர் கைது

Published:

arrested - 2026

ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலப்பதற்காக வெட்டப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை,

சென்னையில் பிரியாணி கடைகளில் ஆட்டுக்கறியுடன் கலப்பதற்காக கன்றுக்குட்டிகளின் கறியை விற்றதாக, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், எழும்பூர் போலீசாரும் சோதனை நடத்தினர். துர்நாற்றம் வீசும் பகுதியில் இருந்த 600 கிலோ கறியை பறிமுதல் செய்த அவர்கள், 7 பேரை பிடித்து விசாரித்தனர். அவை வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி என்பதும், ஆட்டுக்கறியைப் போல இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இவற்றை சென்னையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் வாங்கிச் சென்று, சுவையூட்டிகள் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கறி, பின்னர் அழிக்கப்பட்டது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img